×

2வது டெஸ்ட் முதல் இன்னிங்கில் ஸ்மித் சதத்தால் ஆஸி 416ரன் குவிப்பு

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 83ஓவரில் 339ரன் குவித்தது. களத்தில் இருந்த ஸ்மித் 85, அலெக்ஸ் கேரி 11 ரன்னுடன் 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஸ்மித் பொறுமையாக விளையட அலெக்ஸ் 22, மிட்செல் ஸ்டார்க் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ் கை கொடுக்க ஸ்மித் தனது 32வது சதத்தை 169 பந்துகளில் விளாசினார். அவர் 110 ரன் எடுத்திருந்த போது வேகம் ஜோஷ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த நாதன் லயன் 7, ஜோஷ் ஹசல்வுட் 4 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 100.4ஓவரில் 416ரன் எடுத்தது.

முதல் 5 விக்கெட்களை இழந்து 83ஓவரில் 339ரன் எடுந்திருந்த ஆஸி, அடுத்து 17.4 ஓவரில் 77ரன் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை பறிகொடுத்தது. முதல் நாள் கை கொடுக்காத இங்கிலாந்தின் வேகம், 2வது நாளில் விரைவில் வேலையை காட்டியது. கம்மின்ஸ் 22 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ராபின்சன் , ஜோஷ் டங் தலா 3, ஜோ ரூட் 2, ஆண்டர்சன், ஸ்டூவர்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

The post 2வது டெஸ்ட் முதல் இன்னிங்கில் ஸ்மித் சதத்தால் ஆஸி 416ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Smith ,London ,England ,Australia ,Lord's Arena ,Aussies ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை